Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 527)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

ஸம்வர்த்த உதித ஸூர்யகோடி ஸத்ருசீம் ரங்கேச பாதாவநி ப்ரஸ்தௌஷி ப்ரதியத்ந ரத்நநிகர ஜ்யோதி: சடாம் உத்படாம் தந் மந்யே ததநந்ய ஸூரி பரிஷந் மத்யே நிவேசாய ந: தாத்ருக் வாஸரஸே அபி பேத்தும் அசிராத் அஸ்மாகம் அந்தம் தம:

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ப்ரளய காலத்தில் உதிக்கின்ற கோடி சூரியன்களைக் காட்டிலும், உனக்கு அலங்கரமாக உள்ள இரத்தினக்கற்களின் ஒளியானது அதிகமாகவே உள்ளது. இப்படியாக உனது ஒளியை எங்கும் பரவச் செய்கிறாய். இதற்குக் காரணம் என்னவென்றால் – மனிதர்களாகிய எங்களுக்கு, இந்த உலக வாழ்க்கையில் மட்டுமே அதிகமான மகிழ்ச்சி உள்ளது. ஆனாலும் உன்னைத் தவிர வேறு எதனையும் கருத்தில் கொள்ளாத ஆதிசேஷன், கருடன் போன்ற நித்யசூரிகளின் நடுவில் எங்களையும் நிலை நிறுத்த நீ முடிவு செய்தாய் போலும். இதற்கு இருக்கவேண்டிய தகுதிகளை உண்டாக்கும் பொருட்டு, எங்களுக்குள் இருக்கும் அறியாமை என்னும் இருளை நீக்குவதற்காகவே நீ இப்படி ஒளிர்கிறாய் என்று எண்ணுகிறேன்.