Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 526)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
த்வத் ரத்ன உபல ரச்மி பஞ்ஜர தநுத்ராணம் ஸ்திரம் பிப்ரத: மாத: மாதவ பாதுகே ந து புநர்ஹஸ்தை: ஸ்ப்ருசந்தி ஆகுலை: தூர உத்ஸிக்த தூராட்ய ஜிஹ்மக பில த்வா: பால கோபாநல ஜ்வாலாமித்ர கடோர வேத்ரலதிகா தத்த அர்த்தசந்த்ரம் வபு:
ஸ்ரீரங்கநாச்சியாரைத் திருமார்பில் கொண்ட பெரியபெருமாளின் பாதுகையே! தாயே! உன்னுடைய இரத்தினக்கற்களின் ஒளி என்னும் உறுதியான கலசத்தை ஒரு சிலர் தரித்து நிற்கக்கூடும். இப்படிப்பட்டவர்கள் – கர்வம் போன்ற தாழ்வான குணங்கள் கொண்டுள்ள பணக்காரர்கள் என்னும் பாம்புகள் வசிக்கின்ற, மாளிகைகள் எனப்படும் பொந்தின் அருகில் சென்று, அந்தப் பொந்தின் வாயில் காப்போனின் கோபம் என்னும் தீயைக் கக்குகின்ற பிரம்பினால், சந்த்ரகலை போன்ற கழுத்தில் கை வைத்துத் தள்ளப் படுகின்ற உடலைத் தொடமாட்டனர்.