Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 525)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
ஸ்ரீரங்க இந்தோ: சரண கமலத்வந்த்வ ஸேவா வலேபாத் ஆரூடாயாம் த்வயி மகபுஜாம் ஆநதாந் மௌளிபாகாந் தேஷாம் சூடாமணிபி: அநகை: தாவகாநாம் மணீநாம் கேசாகேசி ப்ரபவதி மித: த்ராஸ லேச உஜ்ஜிதாநாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளின் தொடர்பு காரணமாகக் கர்வம் கொள்ளும் நீ, அவனது திருவடிகளை வணங்கும் தேவர்களின் தலைகளில் அச்சம் கொள்ளாமல் ஏறுகிறாய். அப்போது சற்றும் தோஷம் இல்லாத உன்னுடைய இரத்தினக்கற்களுக்கும், தேவர்களின் தோஷம் இல்லாத க்ரீடங்களில் உள்ள இரத்தினக்கற்களுக்கும் தலைமுடியைப் பிடித்த சண்டை ஏற்படுகிறது. (இரத்தினங்களில் புள்ளிகள் இருந்தால் அந்த தோஷத்திற்கு த்ராஸம் என்று பெயர். அந்த தோஷம் இங்கு பாதுகையில் உள்ள இரத்தினங்களுக்கு இல்லை என்கிறார்).