Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 524)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

கல்பச்ரேணீ திந பரிணதௌ ஜந்து ஜாலே ப்ரஸுப்தே விஷ்வக் வ்யாப்தே ஜகதி தமஸா பாதுகே தாத்ருசேந ஸ்த்யாந ஆலோகை: தவ மணிகணை: வாஸகேஹ ப்ரதீபா ஸம்பத்யந்தே ஸஹ கமலயா ஜாகரூகஸ்ய யூந:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பல கல்ப காலங்களின் வரிசையான ஒரு பகல் பொழுதின் முடிவில் ஜீவராசிகள் அனைத்தும் துன்பம் அடைந்தபோது, இந்த உலகம் முழுவதும் இருளால் எங்கும் சூழப்பட்டு காணப்படும். அப்போது உணர்வற்றுக் கிடக்கும் ஜீவராசிகளின் அருகில், அவற்றின் தாய் தகப்பன் போன்று ஸ்ரீரங்கநாச்சியாருடன் ஸ்ரீரங்கநாதன் விழித்தபடி இருப்பான். இப்படியாக அவர்கள் உள்ள இடத்தில் ஒளி வீசும் விளக்குகளாக, உன்னில் பதிக்கப்பட்ட இரத்தினக் கற்கள் ஒளிர்ந்தபடி இருக்கின்றன.