Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 523)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
பரிசித பதமூலா பாதுகே ரங்கிண: த்வம் ப்ரபவதி புஜமத்யே கௌஸ்துப: அயம் ததாபி பவதி ப்ருசம் அதஸ்தாத் தேஜஸா பவ்ய பூமநா சலபித துரிதாநாம் தாவகாநாம் மணீநாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே ! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளின் கீழே நீ எப்போதும் உள்ளாய். ஆனால் கௌஸ்துப மணியோ அவனது திருமார்பில் உயர்ந்த இடத்தில் உள்ளது. ஆயினும், கௌஸ்துப மணி என்பது அழகான ஒளி பரப்புவதை மட்டுமே செய்கிறது. உனது கற்களில் இருந்து வெளிப்படும் ஒளியானது, அனைவரின் பாவங்களையும் போக்குவதாக உள்ளது. ஆகவே உயர்ந்த இடத்தில் உள்ளபோதிலும் கௌஸ்துப மணியானது, உன்னுடைய இரத்தினக்கற்களைக் காட்டிலும் தாழ்வான தாகவே உள்ளது.