Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 522)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
மணிகண கிரணை: தே கல்ப்பிதே குல்மபேதே ம்ருகயு: இவ குரங்கீம் த்வாம் புரஸ்க்ருத்ய பவ்யாம் ஹரதி சரண ரக்ஷே பக்தி பாச அவருத்தம் ஹ்ருதய ஹரிணயூதம் ப்ராணிநாம் ரங்கநாத:
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்டுள்ள இரத்தினக்கற்களின் ஒளியானது ஒரு புதர் போன்று உள்ளது. அந்தப் புதரில் அமர்ந்துள்ள வேடன் போன்று ஸ்ரீரங்கநாதன் உள்ளான். அவன் செய்வது என்ன? பெண் மான் போன்ற அழகான உன்னை முன்னே நிறுத்துகிறான். இதன் மூலம், பக்தி என்னும் கயிறு கொண்டு கட்டப்பட்ட மக்களின், இதயங்கள் என்னும் மான்களை பிடித்துக்கொண்டு போகிறான்.