Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 521)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
அசிதில பரிணத்தா ரச்மிஜாலை: மணீநாம் துரதிகம் தமம் ந: பாரம் ஆரோபயந்தீ கமல நயநம் ஆத்யம் கர்ணதாரம் ததாநா பவஸி பவ பயோத: பாதுகே போதபாத்ரீ
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இரத்தினக்கற்களின் ஒளிக்கீற்றுகள் என்னும் கயிறு மூலம் நீ கொட்டியாகக் கட்டப்பட்டிருக்கிறாய். ஸம்ஸாரம் என்ற கடலில் அக்கரையாகவும், அடைவதற்குக் கடினமாக உள்ளதும் ஆகிய ஸ்ரீவைகுண்டத்திற்கு எங்களை நீ இட்டுச் செல்கிறாய். அனைத்திற்கும் முன்பாக உள்ள, தாமரை போன்ற கண்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதனை கப்பலின் மாலுமியாகக் கொண்டுள்ளாய். இப்படியாக உள்ள நீ ஸம்ஸாரம் என்ற கடலைக் கடக்க உதவும் கப்பல் போன்று உள்ளாய்.