Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 519)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

அதிசயித பணீச்வரஸ்ய சௌரே: ஸ்வயம் அதிரூடே பதோபதாந பார்ச்வா மணிவலயஜுஷா கரேண மந்தம் ஸ்ப்ருசஸி பதாவநி பாதயோர் யுகம் தத்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷன் மீது சயனித்துள்ள பெரிய பெருமாளின் திருவடிகளை நீ அடைந்து, அந்தத் திருவடிகளின் அருகிலே அமர்கிறாய். உன்னுடைய இரத்தினக்கற்களின் ஒளி என்ற வளையல்களை அணிந்த திருக்கரங்களால், அவனது திருவடிகள் இரண்டையும் மெதுவாக வருடுகிறாய்.