Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 518)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
மானஸ அம்புஜ விகாஸஹேதுபி: ஸேவிதா மணிகணை: ப்ரபாகரை: பாதுகே வஹஸி ஸத்பி: ஆச்ரிதாம் தேவி விஷ்ணுபத ஸம்பதம் நவாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாதனை அடைந்தவர்களின் மனம் என்னும் தாமரை மலர்வதற்குக் காரணமாக உன்னுடைய இரத்தினக்கற்கள் சூரியன்கள் போன்று உள்ளன. இத்தகைய சூரியனை வணங்கியபடி உள்ள அந்த அடியார்கள் அனைவரும், நக்ஷத்ரங்கள் போன்று ஒளியுடன் உள்ளனர். இப்படியாக ஸ்ரீரங்கநாதனின் ஆகாயம் போன்ற திருவடிகளின் அழகை நீ அடைகிறாய்.