Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 517)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

ரச்மிஜால பரிவேஷ பந்துரா ரங்கபூமதி ரத்நபாதுகே விச்வலோசந விஹங்கஹாரிணீ வாகுரேவ விததா விராஜஸே

ஸ்ரீரங்கராஜனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இரத்தினக்கற்களில் இருந்து வரும் ஒளி என்னும் கயிறுகளால் நீ இருக்கமாகக் கட்டப்பட்டு உள்ளாய். இப்படியாக இன்பமாக உள்ள நீ, இந்த உலகத்தினரின் கண்கள் என்னும் பறவைகளைப் பிடிக்க உதவும் பொறி போன்று உள்ளாய்.

பறவைகளைப் பிடிக்க ஒரு கூண்டைத் தயாரித்து, அதனை நன்றாகக் கட்டி வைத்திருப்பார்கள். இங்கு பாதுகையை அந்தக் கூண்டு என்றார். நமது கண்களைப் பறவைகள் எனவும், இரத்தினங்களில் இருந்து வெளிவரும் ஒளிகள் கயிறுகள் என்றும் கூறுகிறார்.