Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 516)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

நிஜ ரத்ந கர அஞ்சலை: மதீயாந் அபராதாந் அவதூய தத்தஸாம்யா ரமயா ஸஹிதஸ்ய ரங்கபர்த்து: பதயோ: அர்ப்ய பாதுகே ஸ்வயம் மாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இரத்தினக்கற்களின் ஒளி என்னும் கைகள் கொண்டு எனது குற்றங்களை நீக்கி, என்னை உன் போன்று ஆக்கவேண்டும். அதன் பின்னர் ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடியுள்ளவனான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் என்னை நீயே சமர்ப்பிக்கவேண்டும்.