Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 515)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

அபிதோ மணிபாதுகே நிபத்தை: க்ருத ஸம்ஸ்கார விசேஷம் ஆத்மரத்நை: குருதே பவதீ பதம் முராரே: கடிநே அஸ்மிந் ஹ்ருதி மே நிவேசயோக்யம்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய நான்கு பக்கங்களிலும் கடினமான இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது ஸ்ரீரங்கநாதனின் திருவடியை வைத்துப் பழக்கப்படுத்துகிறாய். ஏன் என்றால் - அப்போதுதான் அவன் எனது கடினமான மனதில் தனது திருவடியை வைக்க இயலும். இப்படியாகவே நீ அவன் திருவடிகளை பழக்கப்படுத்துகிறாய்.