Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 514)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

தவ ரத்ந கர அர்ப்பிதம் நவீநம் பரிக்ருஹ்ய ஸ்திரம் அம்சுகம் மநோஜ்ஞம் ஜரதம் சுகவத் ஸுகேந தோஹம் க்ருதிந: கேசவ பாதுகே த்யஜந்தி

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! புண்ணிய ஆத்மாக்கள் உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி என்னும் கைகளால் நீ கொடுத்துள்ள புதியதும் நிலையாக உள்ளதும் ஆகிய அழகான திவ்ய சரீரத்தை (உயிர் பிரியும்போது) எடுத்துக் கொள்கின்றனர். இவர்கள், தங்களது மனித உடலைக் கிழிந்த துணி போன்று கவலைப்படாமல் விடுகின்றனர்.