Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 513)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
பரிபச்யதி தேவி ரங்கநாதே ரஹஸி த்வம் ஸவிதே நிவிச்ய லக்ஷ்ம்யா: பரிபுஷ்யஸி ரத்நதாமபி: ஸ்வை: அநஸூயேவ மநோஜ்ஞம் அங்கராகம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாதன் இரவில் ஸ்ரீரங்கநாச்சியாருடன் ஏகாந்தமாக எழுந்தருளி உள்ளான். அப்போது உன்னுடைய அழகான இரத்தினக்கற்களின் ஒளி கொண்டு, ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனியில் அழகான பூச்சைப் பூசுகிறாய். இதனைக் காணும்போது, இராமன் பார்த்திருக்க சீதைக்கு அநஸூயை சந்தனம் பூசியது போன்று உள்ளது.