Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 512)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

ப்ரபவந்தி தவீயஸாம் ஸ்வபாவாத் தவ ரத்நாநி முகுந்த பாதரக்ஷே அயஸாமிவ ஹந்த லோஹகாந்தா: கடிநாநாம் மநஸாம் விகர்ஷணாய

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! ஒரு சிலர் ஸ்ரீரங்கநாதன் வீதியில் வலம் வரும்போது, வீட்டை விட்டு வராமல் இருப்பார்கள். அவர்களது இரும்பு போன்ற மனங்களை, தூரத்தில் இருந்தே இழுக்கவல்ல காந்தம் போன்று உன்னுடைய இரத்தினக் கற்கள் சாமர்த்தியம் கொண்டவையாக உள்ளவனவே!