Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 511)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

திவிஷந் மகுடேஷு ஸஞ்சரந்த்யா: ப்ரசுர: தே மணிபாதுகே ப்ரகாச: திவி ரங்கபதே: மஹோத்ஸவார்த்தம் விததா வந்தந மாலிகேவ பாதி

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் திருவீதி வலம் வரும்போது, அவனை அனைத்து தேவர்களும் வானத்தில் நின்றபடி வணங்குகின்றனர். அப்போது உன்னுடைய ஒளியானது அவர்களின் க்ரீடங்களில் இருந்து வெளிப்படுகின்றது. இதனை காணும்போது, வானத்தில் அரங்கனுக்குக் கட்டப்பட்ட தோரணம் போன்று உள்ளது.