Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 510)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

ராமஸ்ய ரங்கவஸதே: சரண அநுஷங்காத் காஷ்டாம் கதாம் புவநபாவநதாம் ததாநா பாதாவநி ப்ரசுர ரத்நசிலா நிபத்தா ஸம்ஸார ஸந்தரண ஸேது: அஸி ப்ரஜாநாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கவிமானத்தைத் தனது இருப்பிடமாக உடைய இராமனின் திருவடித் தொடர்பு என்னும் உயர்த்தியை நீ அடைந்துள்ளாய். இதற்கு மேல் வேறு எந்தவிதமான உயர்வும் இல்லை என்று நிலையை அடைந்து, மிகவும் தூய்மையான நிலையை அடைந்துள்ளாய். பலவிதமான இரத்தினக்கற்களால் நீ கட்டப்பட்டுள்ளாய். இப்படியாக உள்ள நீ ஸம்ஸாரத்தில் உள்ள மக்கள் தங்கள் துன்பங்களைக் கடக்க உதவும் அணையாக உள்ளாய்.

இங்கு பாதுகையை சேதுவாகக் கூறுகிறார். சேது அணை அயோத்திவாஸியான இராமனின் திருவடித் தொடர்பு உள்ளதாகும், பாதுகை ஸ்ரீரங்கவாஸியான இராமனின் திருவடித் தொடர்பு கொண்டது; அது கற்களால் கட்டப்பட்டது, பாதுகை இரத்தினக்கற்களால் கட்டப்பட்டது; சேதுபாலம் கடலைக் கடக்க உதவியது, பாதுகை ஸம்ஸாரக் கடலை கடக்க உதவுகிறது.