Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 509)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
அந்தர் நிதாய முநிபி: பரிரக்ஷ்யமாணாம் ஆத்மீய ரச்மிகுணிதாம் மணிபாதரக்ஷே ரங்கேச பாதகமல ப்ரதிபந்ந முத்ராம் நீவீம் அவைமி பவதீம் நிகமாந்தவாசாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை முனிவர்கள் தங்கள் மனதிலேயே எப்போதும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். உன்னுடைய இரத்தினங்களில் இருந்து வெளிவரும் ஒளிக்கீற்றுகள், உன்னை அவ்விதம் கட்டி வைக்கும் கயிறுகள் போன்று உள்ளன. அந்தக் கயிற்றில் வைக்கப்படும் முத்திரை போன்று ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் உள்ளன. இப்படியாக உள்ள உன்னைக் கண்டால் வேதாந்தங்கள் என்னும் இரத்தினக்குவியல் நிறைந்த மூட்டை என்றே தோன்றுகிறது.