Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 508)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

வ்யாமுஹ்யத: விஷயி பாலம்ருகாந் மதீயாந் ஸம்ஸார கர்ம ஜநிதாஸு மரீசிகாஸு பாதாவநி ப்ரகுண ரத்ந மரீசி ஜாலை: ஆக்ருஷ்ய விச்ரம்ய கேசவ காந்தி ஸிந்தௌ

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸம்ஸாரம் என்பது கோடை காலமாகத் தோன்றுகிறது; இதில் உலக விஷயங்கள் என்பவை கானல் நீராக உள்ளன. இந்தக் கானல் நீரை உண்மை என்று மயங்கிக் கிடக்கும் புலன்கள் என்ற மான் குட்டிகளை, உனது இரத்தினக்கற்களின் ஒளி என்னும் கயிறு கொண்டு நீ கட்ட வேண்டும். அதன் பின்னர், அந்தப் புலன்களை இழுத்துச் சென்று, ஸ்ரீரங்கநாதனின் திருமேனி அழகு என்னும் கடலில் இளைப்பாறும்படிச் செய்ய வேண்டும்.