Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 507)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

ரத்நோபல ப்ரகர ஸம்பவ ஏஷ தூராத் ரங்காதி ராஜ சரணாவநி தாவகீந: ஆர்த்ர அபராத பரிகிந்ந தியாம் ப்ரஜாநாம் ஆச்வாஸநார்த்த இவ பாதி கரப்ரஸார:

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! அன்றாடம் புதிதாகக் குற்றம் செய்து விட்டு, அதற்காக வருந்தி, ஸ்ரீரங்கநாதனின் அருகில் வந்து வணங்கித் தயங்கியபடி சிலர் நிற்கிறார்கள். அவர்களைத் தேற்றி, அவர்களை அருகில் அழைப்பதற்காக நீட்டும் கரங்கள் போன்று உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி உள்ளது.