Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 506)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

நிர்தூத மோஹதிமிரா: தவ ரத்நதீபை: நிர்விச்யமாந விபவம் நத ராஜபுத்ர்யா ப்ரத்யக்ஷயந்தி நிகமாந்த நிகூடம் அர்த்தம் பாதாவநி த்வயி நிவேசித பாவபந்தா:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் மீது அன்பு வைத்தவர்கள், உன்னில் காணப்படும் இரத்தினக்கற்களின் ஒளி மூலம் தங்களது அறியாமை என்னும் இருள் நீங்கப் பெறுகின்றனர். இதனால் அவர்களுக்கு மேலும் கிட்டுவது என்னவென்றால் – திருப்பாற்கடலின் பெண்ணாகிய ஸ்ரீரங்கநாச்சியாரால் அனுபவிக்கப்படும் பெருமைகள் கொண்டவனும், வேதாந்தங்களில் மறைபொருளாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீரங்கநாதனைக் காண்கின்றனர்.