Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 505)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
ரத்ந அங்குரை: அவிரளா மணிபாதரக்ஷே பாகோந்முகை: பரிகதா புருஷார்த்த ஸஸ்யை: தேவேந ரங்கபதிநா ஜகதாம் விபூத்யை கேதாரிகேவ க்ருபயா பரிகல்பிதா த்வம்
உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இரத்தினங்கள் என்னும் முளைகள் நிறைந்துள்ளதும், நான்குவிதமான புருஷாத்தங்கள் என்னும் பயிர்களால் சூழப்பட்டுள்ளதும் ஆகிய நிலையில் நீ உள்ளாய். இப்படியாக உன்னைக் காணும்போது, ஸ்ரீரங்கநாதன் என்ற அரசன், தன் நாட்டின் மக்கள் வாழ்விற்காகக் கருணையுடன் பயிரிட்ட வயல் போன்று காணப்படுகிறாய்.