Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 504)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
யாமேவ ரத்நகிரணைர் மணிபதரக்ஷே சூடாபதே தநு ப்ருதாம் பவதீ விதத்தே சக்ராதி தைவத சிகாமணி ரஜ்யமாநை: தாமேவ தே ப்ரகடயந்தி பதை: அபிக்யாம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நீ மனிதர்களின் தலையில் சிறந்த அழகை ஏற்படுத்துகிறாய். அந்த மனிதர்களை வணங்கும் இந்திரன் முதலான தேவர்களின் க்ரீடங்களில் உள்ள இரத்தினங்கள், அந்த அழகைத் தாங்கள் பெற்று, அவற்றை வெளிப்படுத்துகின்றனர். (ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை ஆராதிப்பவர்களை தேவர்களும் வந்து வணங்குகின்றனர் என்று கருத்து).