Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 503)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

பாதாவநி ப்ரணயிநாம் ப்ரதிபாதித அர்த்தாம் க்ரீடா ஸரோஜம் இவ சௌரிபாதம் வஹந்தீம் ப்ரத்யுப்த ரத்நநிகர ப்ரதிபந்ந சோபாம் பச்யாமி ரோஹணகிரே: அதிதேவதாம் த்வம்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை அண்டி நிற்பவர்களுக்கு ஏற்றத்தை நீ அளிக்கிறாய். அவனுடைய தாமரை போன்ற அழகான திருவடிகளை, தாமரை மலர் போன்று உனது விளையாட்டின் பொருட்டு வைத்துள்ளாய். எண்ணற்ற இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட அழகுடன் விளங்குகின்றாய். இப்படியாக உன்னைக் காணும்போது இரத்தின மலைக்கு அதிபதி தேவதை என்றே எண்ணுகிறேன்.

இரத்தின மலைக்கு ரோஹணம் என்று பெயர் உண்டு. வெள்ளி மலையானது கைலாயம் என்னும், தங்க மலை மேரு என்று பெயர் பெற்றது போன்றதாகும். இந்த இரத்தின மலையின் தேவதை என்று பாதுகையைக் கொண்டாடுகிறார்.