Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 502)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

ஆஸ்கந்தநாநி விபுதேந்த்ர சிகாமணீநாம் த்வாம் ஆச்ரிதாநி அஸுரஸூதந பாதரக்ஷே ரத்நாநி தே ஸ்துதி ஸுவர்ண பரீக்ஷணார்த்தே நூநம் பஜந்தி நிகஷோபலதாம் கவீநாம்

அசுரர்களின் சத்ருவான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை வந்து வணங்கும் தேவர்களின் க்ரீடங்களில் உள்ள இரத்தினக்கற்களை, உன்னில் பதிக்கப்பட்ட இரத்தினக்கற்கள் கவர்ந்து இழுக்கின்றன (அல்லது அந்த இரத்தினங்களைப் பாதுகையில் உள்ள இரத்தினங்கள் மிதிக்கின்றன என்றும் கொள்ளலாம்). இந்த இரத்தினங்கள் மேலும் செய்வது என்னவென்றால் – உன்னைப் பற்றிய துதிகள் இயற்றும் கவிஞர்களின் அக்ஷரங்கள் (சொற்கள்) என்னும் தங்கத்தைச் சோதிக்கும் உரைகல்லாகவும் உள்ளன என்பது நிச்சயம்.