Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 501)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
த்ராஸாத் ஸ்வயம் ப்ரணமதாம் தநுஜேச்வராணாம் ஸங்க்யே அவலூந சிரஸம் அபி மௌளிரத்நை: ஆயோஜயதி அநுகலம் மணிபாதுகே த்வாம் ஸைரந்த்ரிகேவ முரவைரி க்ருபாண தாரா
உயர்ந்த மணிகள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் நந்தகம் என்னும் வாளுக்குப் பயந்து பல அசுர அரசர்கள் தாங்களாகவே பணிந்து நிற்பர். ஒரு சிலர் தங்களாகவே பணியாமல், யுத்த பூமியில் தலை அறுக்கப்பட்டுப் பணிவர். இவர்கள் இருவருடைய க்ரீடங்களில் உள்ள இரத்தினக்கற்கள் உனக்கு அலங்காரமாக வைக்கப்படும். இந்தச் செயலைச் செய்யும் பணிப்பெண் போன்று ஸ்ரீரங்கநாதனின் வாள் உள்ளது.