Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 500)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
ரத்ந ப்ரபா படல சக்ர மநோஹரா த்வம் பத்ம ஆருணம் பதம் இதம் த்வயி ரங்கபர்த்து: மந்யே தத் ஏதத் உபயம் மணிபாதரக்ஷே சக்ராப்ஜமண்டலம் அகிஞ்சந ரக்ஷணார்ஹம்
இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! இரத்தினக்கற்களில் இருந்து வெளிவரும் ஒளி என்னும் வட்டம் மூலம் நீ மிகவும் அழகாக உள்ளாய். ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற சிவந்த அழகான திருவடிகள் எப்போதும் உன் மீது உள்ளன. இதனைக் காணும்போது வேறு கதியில்லாதவர்களுக்குச் சாஸ்திரங்கள் கூறும் சக்ராப்ஜ மண்டலம் என்றே நான் எண்ணுகிறேன்.
கதியில்லாதவர்களுக்கு உபாயமாக சாஸ்திரத்தில் சக்ராப்ஜ மண்டலம் என்பது கூறப்பட்டுள்ளது. வட்டம் ஒன்றை வரைந்து, அந்தச் சக்ர வடிவத்தில் கோடுகள் கிழித்து, அதன் நடுவில் தாமரை மலர்களை எழுதி, அதனைப் பூஜிக்க வேண்டும் என்பர். இதனை இங்கு உருவகம் செய்கிறார்.