Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 499)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
வ்யங்க்தும் க்ஷமம் பகவத: ஜகத் ஈச்வரத்வம் வஜ்ராங்குச த்வஜ ஸரோருஹ சக்ரசிஹ்நம் ஆச்லிஷ்ய நிர்ப்ரருசிம் மணிபாதுகே த்வாம் ஆஸீத் அநாபரண ஸுந்தரம் அங்க்ரிபத்மம்
இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அனைத்து உலகங்களுக்கும் ஈச்வரனாக உள்ளவன் ஸ்ரீரங்கநாதனே ஆவான் என்பதை அனைவருக்கும் வெளிப்படுத்தும் விதமாக, அவனது திருவடிகளில் வஜ்ராயுதம், அங்குசம், கொடி, தாமரை சக்ரம் போன்ற அடையாளங்கள் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட அவனது இணைந்த திருவடிகள் உன்னை அணைத்துக்கொண்டு, உன்னில் இருந்து வெளிவரும் ஒளி மூலம், வேறு எந்த ஆபரணமும் அணியாமலேயே மிகுந்த அழகாக உள்ளன.