Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 498)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

ஆகீர்ண ரத்ந நிகராம் மணிபாதுகே த்வாம் ரங்கேச்வரஸ்ய லலிதாம் விபணிம் ப்ரதீம: யத் ஸம்ச்ரயேண பவதி ஸ்திர பக்திமூல்யம் கைவல்யம் அத்ர ஜகதாம் க்ரய விக்ரயார்ஹம்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இரத்தினக் குவியலைப் பரப்பி வைத்துள்ள உன்னை ஸ்ரீரங்கநாதனின் அழகான கடைத்தெரு என்றே எண்ணுகிறோம். இந்தக் கடைத்தெருவை அடைவதன் மூலமாக, நழுவாத பக்தி என்னும் விலையைக் கொடுத்து, மோக்ஷம் என்பதை வாங்க இந்த உலகினரால் இயல்கிறது. இப்படியாக கொடுத்து - வாங்கும் இடமாக நீ உள்ளாய்.