Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 497)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

தேவஸ்ய ரங்கவஸதே: புரத: ப்ரவிருத்தை: உத்தூத விச்வ திமிராம் மணிரச்மிஜாலை: மந்யே மதீய ஹ்ருதய ஆயதந ப்ரவேச மங்கள்ய தீபகணிகாம் மணிபாதுகே த்வாம்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் முன்பாக எழுத்தருளியுள்ள நீ, எங்கும் பரவுகின்ற உனது இரத்தினக்கற்களின் ஒளி மூலமாக, சுற்றியுள்ள அனைத்து இருளையும் நீக்குகிறாய். எனது மனம் என்னும் வீட்டில் ப்ரவேசம் செய்யும் ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்றும் சிறு விளக்காகவே நான் உன்னை எண்ணுகிறேன்.