Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 496)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
ஸத்ய: த்வத் உத்க்ரஹதசா நமித ஆக்ருதீநாம் ஸ்ரஸ்த அம்சுகம் நிஜருசா மணிபாதுகே த்வம் பத்மா ஸஹாய பரிவாரவிலாஸி நீநாம் பட்டாம் சுகை: இவ பயோதரம் ஆவ்ருணோஷி
இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அதிகாலைப் பொழுதில் ஸ்ரீரங்கநாதன் திருக்கண் விழித்தவுடன், உன்னை ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான அவனது திருவீதிகளில் சேர்ப்பதற்காக, உன்னை எடுப்பதற்கு அங்குள்ள பணிப்பெண்கள் வேகமாகக் குனிகின்றனர். அப்போது அவர்களின் மேல் ஆடைகள் விலக, அவர்களின் ஸ்தனங்களை மறைக்கும் பட்டுத்துணி போன்று, உனது ஒளியை அவர்கள் மீது வீசுகிறாய் போலும்.