Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 495)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
நித்ரா ரஸ ப்ரணயிநோ மணிபாதரக்ஷே ரங்கேச்வரஸ்ய ஸ்விதம் ப்ரதிபத்யமாநா சய்யாபணீந்த்ரம் அபித: பவதீ விதத்தே ரத்ந அம்சுபி: யவநிகாம் இவ தர்சநீயாம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் சயனிக்கும் நேரம் வருகிறது. அப்போது நீ செய்வது என்ன? அவனது அருகில் சென்று, அவனது படுக்கையாக உள்ள ஆதிசேஷனுக்கு நான்கு பக்கங்களிலும், உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி மூலமாக, ஒளி வீசும் திரையைக் கட்டுகிறாய் போலும்.