Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 494)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
ரத்நாநி ரங்கேச்வர பாதரக்ஷே த்வத் ஆச்ரிதாநி அப்ரதிகை: மயூகை: ஆஸேதுஷீணாம் ச்ருதி ஸுந்தரீணாம் விதந்வதே வர்ண நிசோள லக்ஷ்மீம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் அருகில் எப்போதும் வேதங்கள் என்னும் பெண்கள் சூழ்ந்து நின்றபடி உள்ளனர். அவர்களது பல நிறங்களுடன் கூடிய ரவிக்கைகள் போன்ற அழகை, தடை இல்லாத உனது இரத்தினக்கற்களின் ஒளிக்கீற்றுகள் உண்டக்குகின்றன.