Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 493)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
ரங்கேச பாதாவநி தாவகீநை: ஸ்ப்ருஷ்டா: கதசித் மணிரச்மிபாசை: காலஸ்ய கோரம் ந பஜந்தி பூய: காராக்ருஹ அந்தேஷு கச அபிகாதம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளிக்கீற்றுகள் என்னும் கயிறுகளால் ஒரு முறை தீண்டப் பெற்றவர்கள், யமனின் சிறைச்சாலையில் பயங்கரம் சூழ்ந்த சாட்டை அடிகளை எப்போதும் பெறுவதில்லை.