Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 492)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

ஜநஸ்ய ரங்கேச்வர பாதுகே த்வம் ஜாத அநுகம்பா ஜநயஸி அயத்நாத் ஆக்ருஷ்ய தூராத் மணிரச்மிஜாலை: அநந்ய லக்ஷ்யாணி விலோசநாநி

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை தரிசிக்க வரும் அடியார்களின் கண்களை, உன்னுடைய கருணையை வெளிப்படுத்தும் இரத்தினக்கற்களின் ஒளி மூலமாக, மிகவும் எளிதாக, தூரத்தில் இருந்தே கவர்ந்து இழுக்கிறாய். இதனால் அவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருமேனி உட்பட வேறு எதனையும் காணாமல், உன்னை மட்டும் காணும்படிச் செய்கிறாய்.