Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 490)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
பஜந்தி ரங்கேச்வர பாதரக்ஷே ப்ரகல்பயந்த: விவிதாந் புமர்த்தாந் உத் அர்ச்சிஷச் சிந்தயதாம் ஜநாநாம் சிந்தாமணி த்வம் மணய: த்வதீயா:
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனையே எப்போதும் த்யானித்தபடி உள்ளவர்களுக்கு, அவர்களுக்கு ஏற்ற புருஷார்த்தங்களை அளிக்கவல்லதாக உனது இரத்தினங்கள் உள்ளன. இதனால் இவை சிந்தாமணியின் தன்மையை அடைகின்றன. (சிந்தாமணி என்பது ஸ்வர்க்கத்தில் உள்ள பொருளாகும். இது கேட்பதையும் நினைப்தையும் அளிக்கவல்லதாகும்)