Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 489)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

பத்நாஸி ரங்கேச்வர பாதரக்ஷே மந்யே யதார்ஹம் மணிரச்மிஜாலை: ஸேவாநதாநாம் த்ரிதசேச்வராணாம் சேஷாபடீம் சேகர ஸந்நிக்ருஷ்டாம்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் தங்கள் தலை சாய்ந்து, அதனைத் தொடுவதற்காக வணங்கியபடி தேவர்கள் நிற்கின்றனர். இவர்களது தலையில் உனது இரத்தினக்கற்களின் ஒளிக்கீற்றுகள் மூலமாக பரிவட்டத்தை நீ கட்டுகிறாய் என எண்ணுகிறேன்.