Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 488)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

ஸமாதிபாஜாம் தநுதே த்வதீயா ரங்கேச பாதாவநி ரத்நபங்க்தி: ஸ்தானம் ப்ரயாதும் தமஸ: பரம் தத் ப்ரதீபக்ருத்யாம் ப்ரபயா மஹத்யா

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! ப்ரக்ருதி மண்டலம் என்னும் இருளுக்கு அப்பால் உள்ள பரமபதம் செல்வதற்கு யோகிகள் முனைகின்றனர். அப்படி அவர்கள் செல்வதற்கு உதவும் தீவட்டிகளின் செயலை உனது இரத்தினக் கற்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள் செய்கின்றன.