Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 487)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

தித்ருக்ஷமாணஸ்ய பரம் நிதாநம் ஸ்நேஹாந் விதே யோகதசா விசேஷே ஸம்வித் ப்ரதீபம் மணிபாதரக்ஷே ஸந்துக்ஷயந்தீவ மரீசய: தே

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மிகவும் உயர்ந்த செல்வமாகிய ஸ்ரீரங்கநாதனைக் காணவேண்டும் என்று விரும்பும் யோகி ஒருவன், தனது பக்தியை நெய்யாக்கி, யோகம் என்னும் திரியை இட்டு, ஞானம் என்னும் விளக்கை ஏற்ற முயல்கின்றான். உன்னுடைய ஒளியானது, அந்த விளக்கு நன்றாக எரியும்படித் தூண்டிவிடுகிறது.