Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 486)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

கஸ்யாபி பும்ஸ: கநகாபகாயா: புண்யே ஸலீலம் புளிநே சயாளோ: ஸமீப வ்ருத்திர் மணிபாதுகே த்வம் ஸம்வாஹயந்தீவ பதம் கரை: ஸ்வை:

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தூய்மையான மணல் மேட்டைக் கொண்டுள்ள காவிரியின் கரையில் மிகவும் உல்லாஸமாக, தனித்து விளங்கும் அழகிய மணவாளன் சயனித்துள்ளான். அவனது திருவடிகளை உனது ஒளி என்னும் திருக்கரங்களால் பிடித்து விட்டபடி நீ அவன் அருகில் உள்ளாய்.