Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 485)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
ரங்கேச பாதாவநி தாவகாநாம் ரத்ந உபலாநாம் த்யுதய: ஸ்புரந்தி ச்ரேய: பலாநாம் ச்ருதி வல்லரீணாம் உபக்நசாகா இவ நிர்வ்யபாயா:
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மக்களுக்கு வேண்டிய புருஷார்த்தம் என்னும் பழங்களை அளிக்கின்ற கொடிகளாக வேதங்கள் உள்ளன. அந்த வேதங்கள் படர்வதற்கு ஏற்ற கொழுகொம்புகளாக உனது இரத்தினக் கற்களின் ஒளிக்கீற்றுகள் உள்ளன.