Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 484)
Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி
அஸூர்யபேத்யாம் ரஜநீம் ப்ரஜாநாம் ஆலோகமாத்ரேண நிவாரயந்தீ அமோக வ்ருத்தி: மணிபாதரக்ஷே முரத்விஷ: மூர்த்திமதீ தயா த்வம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மக்களின் ஸம்ஸார பந்தம் என்னும் இரவுப்பொழுதை நீக்க சூரியனால் இயலாது. இந்த இருளை உன்னுடைய ஒளி மூலம் மிகவும் எளிதாக நீ விலக்குகிறாய். ஆக, தடை இன்றி ஸஞ்சாரம் செய்கின்ற ஸ்ரீரங்கநாதனின் கருணை என்பது வடிவம் எடுத்ததோ என்று எண்ணும்படியாகவே நீ உள்ளாய்.
இங்கு பாதுகையை ஸ்ரீரங்கநாதனின் தயாதேவி என்று உருவகம் செய்கிறார். ஸ்ரீநிவாஸனின் தயாதேவியைக் குறித்து தயாசதகம் அருளிச்செய்த ஸ்வாமி தேசிகன், ஸ்ரீரங்கநாதனின் தயாதேவியைக் குறித்து பாதுகாஸஹஸ்ரம் அருளியதாகக் கொள்ளலாம்.