Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 483)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

முகுந்த பாதாவநி மத்ய நாட்யா மூர்த்தந்யயா நிஷ்பதத: முமுக்ஷோ: ஆப்ரஹ்ம லோகத் அவலம்பநார்த்தம் ரத்நாநி தே ரச்மிகணம் ஸ்ருஜந்தி

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தலையின் நடுவில் உள்ள நாடியின் மூலம் வெளிக்கிளம்பி, பரமபதம் செல்கின்ற முமுக்ஷுவிற்கு உனது ஒளிக்கற்றைகள் அனைத்தும் கயிறுகள் போன்று பிடித்துக் கொண்டு செல்வதற்காக உண்டாகின்றன.