Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 482)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

விதேஹி சௌரே: மணிபாதுகே த்வம் விபத்யமாநே மயி ரச்மிஜாலை: ஆஸீததாம் அந்தக கிங்கராணாம் வித்ராஸநாத் வேத்ரலதா விசேஷாந்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது அந்திம காலத்தில், எனது அருகில் யம தூதர்கள் வந்து என்னை அச்சுறுத்தக்கூடும். அப்போது அவர்களை அச்சம் செய்யும் வகையில் விரட்டக்கூடிய பிரம்புகளாக உன்னில் இருந்து ஒளிக்கற்களை உண்டாக்க வேண்டும்.