Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 481)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

உத் அர்ச்சிஷ: தே ரங்கேந்த்ர பாதாவநி பஹிர் மணீந் அந்தர்மணி ரவம் ச்ருத்வா மந்யே ரோமாஞ்சித ஆக்ருதீந்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன் மீது இழைக்கப்பட்டுள்ள இரத்தினங்களின் ஒளியானது, ஒளிக்கம்பிகள் போன்று காணப்படுகின்றன. இதனைக் காணும்போது உன் உள்ளே இருக்கின்ற இரத்தினங்களின் நாதத்தைக் கேட்டு இவை மயிர்க்கூச்சல் எடுத்தது போன்று தோன்றுகிறது.