Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 480)
Paththati 14 - நாத பத்ததி
க்ஷிபதி மணிபாதரக்ஷே நாதை: நூதம் ஸமாச்ரித த்ராணே ரங்கேச்வரஸ்ய பவதீ ரக்ஷாபேக்ஷா ப்ரதீக்ஷண விளம்பம்
இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தனது அடியார்கள் தன்னிடம், ” என்னைக் காக்கவேண்டும்”, என்று விண்ணப்பம் செய்யவேண்டும் என்று ஸ்ரீரங்கநாதன் எதிர்பார்க்கிறான். இத்தகைய அவனது எண்ணத்தை உனது நாதங்களால் நீக்கி, அவன் காப்பாற்றும் காலதாமதத்தைக் குறைத்து விடுகிறாய்.
எம்பெருமான் கருணை உள்ளவன் என்றாலும், ”என்னைக் காப்பாய்” என்று ஒருவன் கூறாதவரையில் அவன் ஏதும் செய்யமாட்டான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனைக் கண்ட பாதுகை, “இது என்ன விபரீதம்! அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் காப்பது நம் கடமை அல்லவோ?”, என்று திருவரங்கனைத் துரிதப்படுத்தி விடுகிறாள் என்கிறார்.