Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 479)

Paththati 14 - நாத பத்ததி

தவ அம்ப கில கேலதாம் கதிவசேந கர்ப்பாச்மநாம் ரமா ரமண பாதுகே கிமபி மஞ்ஜுபி: சிஞ்ஜிதை: பதிஸ்துதி விதாயிபி: த்வதநு பாவ ஸித்தாந்திபி: ஸயூத்ய கலஹாயிதம் ச்ருதிசதம் ஸமாபத்யதே

ஸ்ரீரங்கநாச்சியாருக்கு இனிமையானவனாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரம் காரணமாக ஒலிக்கின்ற இனிமையான இரத்தினக்கற்கள் கொண்ட உனது பெருமை என்பது, அவனது திருவடிகளைக் காட்டிலும் உயர்ந்தவையே என்று வேதங்கள் முழங்குகின்றன. ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாராட்டித் துதிப்பவர்களுடன் இந்தச் சூழ்நிலையில், வேதங்கள் ஏனோ முரணாகப் பேசி, கலகம் செய்கின்றன.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் புகழ்ந்து ச்லோகம் இயற்றுவதாக ஒருவர் கூற, ஸ்வாமி தேசிகன் பாதுகைகளைப் புகழ்ந்து ச்லோகம் இயற்றுவதாகக் கூற – இப்படித்தான் ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் உண்டானது. இங்கு திருவடிகளைப் பற்றிப் புகழ்ந்து ச்லோகம் இயற்ற முயன்றவரால் சில நூறு ச்லோகம் கூட இயற்ற முடியவில்லை. ஆகவே வேதங்கள் கூட அவருக்குக் கைக்கொடுக்காமல், கலகம் செய்ததோ என்று வியக்கிறார்.