Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 477)
Paththati 14 - நாத பத்ததி
ரங்கே தேவி ரதாங்கபாணி சரண ஸ்வச்சந்த லீலாஸகி ஸ்தோக ஸ்பந்தித ரம்ய விப்ரம கதி ப்ரஸ்தாவகம் தாவகம் கால உபாகத காலகிங்கர சமூ ஹுங்கார பாரம்பரீ துர்வார ப்ரதிவாவதூகம் அநகம் ச்ரோஷ்யாமி சிஞ்ஜாரவம்
சக்கரத்தைத் திருக்கரத்தில் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடன் இனிமையாக விளையாடி மகிழும் அதன் தோழியான பாதுகையே! ஸ்ரீரங்கத்தில் எப்போதும் உல்லாஸமாக ஸஞ்சாரம் செய்கின்ற நம்பெருமாளின் ஸஞ்சாரத்தை சிறுகச்சிறுக அசைந்தபடி நீ அறிவிக்கிறாய். இப்படிப்பட்ட உனது நாதம் என்ன செய்யவேண்டும் தெரியுமா - எனது அந்திம காலத்தில் எண்ணற்ற யமதூதர்கள் தொடர்ந்து என்னை அதட்டியபடி இருப்பார்கள். அவர்களால் மறுமொழி கூற இயலாதபடி, குற்றமற்றதாக ஒலிக்கவேண்டும். இதனை நான் கேட்டபடி இருப்பேனாக. விளக்கம் – தனது அந்திம காலம் திருவரங்கத்திலேயே கழியவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். யம தூதர்கள் வரும்போது, பாதுகைகளின் ஓசைகள் நம்பெருமாள் வருவதை அறிவிக்க வேண்டும் என்று விண்ணம்பம் செய்கிறார்.