Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 476)

Paththati 14 - நாத பத்ததி

ஸ்வேஷு ஸ்வேஷு பதேஷு கிம் நியமயஸி அஷ்டௌ திசாம் ஈச்வராந் ஸ்வைராலாபகதா: ப்ரவர்த்தயஸீ கிம் த்ரய்யா ஸஹாஸீநயா ரங்கேசஸ்ய ஸமஸ்தலோகமஹிதம் ப்ராப்தா பத அம்போருஹம் மா பைஷரீதி மாம் உதீரயஸி வா மஞ்ஜுஸ்வநை: பாதுகே

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து உலகங்களும் போற்றுகின்ற ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற அழகிய திருவடிகளை அடைந்து நீ வீற்றுள்ளாய். அங்கு இருந்தபடியே இனிமையான நாதம் எழுப்பியபடி உள்ளாய். இதன் மூலம் – இந்த்ரன் உள்ளிட்ட எட்டுத் திசையின் காவலர்களை, அவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பணியாற்றும்படி உத்தரவு இட்டபடி உள்ளாயோ? அல்லது ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் எப்போதும் அமர்ந்துள்ள வேதங்களுடன் உரையாடியபடி உள்ளாயோ? அல்லது என்னிடம், “அஞ்சவேண்டாம்”, என்று கூறுகிறாயோ?