Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 475)
Paththati 14 - நாத பத்ததி
பரித்ரஸ்தா புண்யத்ரவ பதந வேகாத் ப்ரதமத: க்ஷரத்பி: ஸ்ரீரங்கக்ஷிதிரமண பாதாவநி ததா விதாமாஸு: தேவா: பலிமதந ஸம்ரம்பம் அநகை: ப்ரணாதை: தே ஸத்ய: பதகமல விக்ராந்தி பிசுநை:
ஸ்ரீரங்கத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடியைக் காப்பாற்றும் பாதுகையே! த்ரிவிக்ரம அவதாரம் செய்த காலத்தில், மஹாபலியின் புண்ணிய காலம் கழிந்து அவன் மண்ணுலகில் விழும் காலம் வந்ததை, த்ரிவிக்ரமனாக அறிவிக்கும் வகையில், அவனது திருவடித் தாமரையில் உள்ள குற்றமற்ற உனது இனிய நாதம் மூலம் தெரிவித்தாய். இதனால் தேவர்கள், ஸ்ரீரங்கநாதன் த்ரிவிக்ரமான நின்று மஹாபலியை அடக்குகின்ற செயலை அறிந்தனர்.
மனிதர்கள் மட்டும் அல்லாமல், தேவர்களுக்கும் பயம் உண்டு. அவர்களின் பயத்தையும் நீக்குவதாகப் பாதுகைகளின் செயல்கள் உள்ளதைக் காண்பிக்கிறார்.